/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போன் பண்ணினால் 8.45 நிமிடத்தில் உதவி! 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் அபார பணி
/
போன் பண்ணினால் 8.45 நிமிடத்தில் உதவி! 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் அபார பணி
போன் பண்ணினால் 8.45 நிமிடத்தில் உதவி! 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் அபார பணி
போன் பண்ணினால் 8.45 நிமிடத்தில் உதவி! 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் அபார பணி
ADDED : அக் 02, 2025 12:54 AM

கோவை: இவ்வாண்டு துவக்கத்தில், கோவை மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டபோது, அவ்வாகனம் வந்து சேரும் நேரம் 10.1 3 நிமிடங்களாக இருந்தது.
விபத்து பகுதிகளை அடையாளம் கண்டு, ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டதால், தற்போது, 8.45 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றடைந்து, விபத்தில் சிக்கியோர் காப்பாற்றப்படுகின்றனர்.
மத்திய சுகாதாரத்துறையில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது. கோவையில், 62 ஆம்புலன்ஸ்கள், 4 இரு சக்கர ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோவை மண்டல மேலாளர் ஜெயக்குமார் கூறியதாவது:
விபத்து சம்பந்தமான அழைப்புகளில், நடப்பாண்டு ஜனவரியில் சராசரியாக, 10.13 நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்தை, ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. இந்த நேரத்தை ஆக. மாதத்தில் சராசரியாக 8.45 நிமிடங்களாக குறைத்துள்ளோம்.
கோவையில் அதிகமாக விபத்து ஏற்படும், 20-25 'ஹாட் ஸ்பாட் ' இடங்களில், ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்கத் துவங்கினோம். இதனால், அபாயத்தில் இருப்போருக்கு விரைந்து உதவ முடிந்தது .
விபத்து சார்ந்த பிற அழைப்புகளுக்கு, சராசரியாக 9.15 நிமிடங்களில் சேவை அளிக்கப்படுகிறது. 8 மாதத்தில், 53,979 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக சேவை செய்திருக்கிறோம். அதில், 5,957 பேர் கர்ப்பிணிகள். இவ்வாறு, அவர் கூறினார்.
'எட்டு மாதங்களில் 53,979 பேர் மீட்பு'
நடப்பாண்டு ஆக., வரையிலான எட்டு மாதங்களில், 108 மூலமாக, 53,979 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில், 10,097 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி மீட்கப்பட்டவர்கள். மொத்த அழைப்புகளில், 19 சதவீத அவசர அழைப்புகள் விபத்துக்கள் என்றே பதிவாகியுள்ளது. விஷம் அருந்திய அழைப்புகள்-2,538, விலங்கு தாக்குதல்-800, மாரடைப்பு மற்றும் இதய கோளாறு-4,298, தீ விபத்து-172, ஒரு வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தை பாதிப்பு-489, மூச்சுத்திணறல்-4,307, தற்கொலை முயற்சி-283, தாக்குதல்-1,992, அலர்ஜி-87 என பல்வேறு பிரிவுகளில் 108 சேவை வழங்கப்பட்டுள்ளது.