/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக மாசு படுவதால் ஆஸ்துமா, கேன்சர் பாதிப்பு! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
/
அதிக மாசு படுவதால் ஆஸ்துமா, கேன்சர் பாதிப்பு! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
அதிக மாசு படுவதால் ஆஸ்துமா, கேன்சர் பாதிப்பு! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
அதிக மாசு படுவதால் ஆஸ்துமா, கேன்சர் பாதிப்பு! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
ADDED : டிச 04, 2024 09:59 PM
ஆனைமலை; அதிகளவு மாசு படுவதால் மனிதனுக்கு ஆஸ்துமா, கேன்சர், இதய நோய்கள் ஏற்படுகின்றன, என, விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், தேசிய மாசுகட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர்கள் பூவிழி, மகாலட்சுமி, ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, லோகநாயகி ஆகியோர் தேசிய மாசுகட்டுப்பாட்டு தினத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கினர்.
ஆசிரியர்கள் பேசியதாவது:
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிச.,2ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதிகளவு மாசு படுவதால் மனிதனுக்கு ஆஸ்துமா, கேன்சர், இதய நோய்கள் ஏற்படுகின்றன. தொழிற்சாலைகளின் புகை, வாகனங்களின் புகை, கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவையே இதற்கு காரணம்.
தேசிய மாசுகட்டுப்பாட்டு தினத்தில் இருந்து, மாணவர்கள், தனி வாகனங்களுக்கு பதிலாக பொது வாகனங்களான பஸ், ரயில், ேஷர் ஆட்டோ போன்றவை பயன்படுத்த வேண்டும். வீட்டில் மக்கும், மக்காத கழிவுகள் என பிரித்து, மக்கும் கழிவுகளை செடிகளுக்கு உரமாகவும், மக்காத கழிவுகளை மறு சுழற்சிக்கும் அனுப்ப வேண்டும்.
கடைகளுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை எடுத்துச்சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும்.
விழாக்களில், அதிக ஓசை உள்ள பட்டாசுகளை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் குப்பையை கொட்டக்கூடாது. மழைநீரை சேமிக்க வேண்டும். அதிகளவு மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும். வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்து நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும்.
மாணவர்கள், தங்களது வீடுகளில் தினமும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும். பறவைகள் வாயிலாக அதிகளவு மரங்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, பறவைகளுக்கு தண்ணீர் வைப்போம் என உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
மாணவர்களிடையே விழிப்புணர்வு கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.