/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரைக்கு அதிக விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
கொப்பரைக்கு அதிக விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 19, 2025 08:55 PM
அன்னுார்; அன்னூரில் நேற்று நடந்த ஏல விற்பனையில், தேங்காய் கொப்பரைக்கு அதிக விலை கிடைத்தது.
அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை வேளாண் விளை பொருட்கள் ஏல விற்பனை நடைபெறுகிறது.
நேற்று நடந்த ஏலத்தில், 35 மூட்டை தேங்காய் கொப்பரை ஏலத்துக்கு வந்திருந்தது. குறைந்தபட்சம் ஒரு கிலோ 112 ரூபாய் 89 பைசா முதல், அதிகபட்சமாக 163 ரூபாய் 9 பைசா வரை விற்பனையானது.
880 கிலோ கொப்பரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து,102 ரூபாய்க்கு விற்பனையானது. சமீபத்தில் தேங்காய் கொப்பரைக்கு இதுதான் அதிகபட்ச விலை என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் கூறுகையில், ''விவசாயிகள் அனைத்து விளைபொருட்களையும் ஏல விற்பனைக்கு கொண்டு வரலாம். நல்ல விலை பெறலாம். இடைத்தரகு தரத் தேவையில்லை,'' என்றார்.