/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சிக்கு ஹிந்து முன்னணி கண்டனம்
/
நகராட்சிக்கு ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : ஜன 22, 2025 11:21 PM

மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் நகராட்சியை கண்டித்து, ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம், மேட்டுப்பாளையம் லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர்கள் பாலன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேசினார்.
கூட்டத்தில், அனைத்து ஹிந்து சமுதாய சங்க நந்தவனத்தை,சீர் குலைக்க முயற்சிக்கும், மேட்டுப்பாளையம் நகராட்சியை, இந்த பொதுக் குழு வன்மையாக கண்டிக்கிறது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்பட கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிளைகளிலிருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
துணைத் தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.

