ADDED : ஜூலை 27, 2026 04:43 AM

அ நிறம் | அளவு
சிவானந்தா காலனி: அரசு கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் கட்டண தரிசன முறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் பேசியதாவது:
அரசு கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுக்க போராட்டம் நடக்கிறது. மறைந்த தலைவர் ராமகோபாலன் நீண்ட காலமாக இந்துக்களை ஒன்றுபடுத்த போராடினார். அதன் பலனாக தற்போது இந்து சமுதாயம் விழிப்புணர்வு அடைந்துள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன், செயலாளர் உருவை பாலன், மாவட்டத் தலைவர் தசரதன், பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
