/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டமாக சுற்றும் பன்றிகள் :நிம்மதி இழந்த பொதுமக்கள்
/
கூட்டமாக சுற்றும் பன்றிகள் :நிம்மதி இழந்த பொதுமக்கள்
கூட்டமாக சுற்றும் பன்றிகள் :நிம்மதி இழந்த பொதுமக்கள்
கூட்டமாக சுற்றும் பன்றிகள் :நிம்மதி இழந்த பொதுமக்கள்
ADDED : பிப் 07, 2024 01:06 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், குடியிருப்பு மற்றும் கோவில் அருகே பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிவதால், குடியிருப்பு பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட தந்தை பெரியார் வீதி, செல்லப்பகவுண்டர் வீதி, குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள், பன்றிகள் தொல்லையால் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரத்தில், குடியிருப்பு பகுதிகள் அருகே, பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்றி வளர்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பன்றிகள் வளர்ப்பு கட்டுப்படுத்தவில்லை. பல இடங்களில் பன்றிகள் அதிகளவு கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
அதிலும், செல்லமுத்து கவுண்டர் வீதி மற்றும் தந்தை பெரியார் வீதியில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
வீதிகளில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், கோவிலைச் சுற்றிலும் குட்டிகளுடன் வலம் வரும் பன்றிகளால், கோவிலுக்கு செல்வோர் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
பன்றிகளை குடியிருப்பு பகுதியிலிருந்து, ஒரு கி.மீ., துாரத்திற்கு அப்பால் வளர்க்க வேண்டும். வளர்க்கப்படும் பன்றிகளை, குடியிருப்பு பகுதிகள், வீதிகள் மற்றும் சாலைகளில் சுற்ற விடக்கூடாது என்ற விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

