/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சச்சிதானந்த ஜோதி நிகேதனில் ஹாக்கி போட்டி நாளை துவக்கம்
/
சச்சிதானந்த ஜோதி நிகேதனில் ஹாக்கி போட்டி நாளை துவக்கம்
சச்சிதானந்த ஜோதி நிகேதனில் ஹாக்கி போட்டி நாளை துவக்கம்
சச்சிதானந்த ஜோதி நிகேதனில் ஹாக்கி போட்டி நாளை துவக்கம்
ADDED : ஆக 10, 2025 02:35 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி உள்ளது. இங்கு சி.பி.எஸ்.இ. தெற்கு மண்டலம்-1 ஹாக்கி போட்டிகள், நாளை (11ம் தேதி) துவங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபர் ஆகிய தீவுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 56 பள்ளிகளை சேர்ந்த, 1000 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் நாக் அவுட் மற்றும் லீக் சுற்றுகள் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி, தேசிய அளவில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும்.
கடந்தாண்டு தெற்கு மண்டலம்-1ல் நடந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியை சேர்ந்த, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் அடங்கிய, 5 அணிகள் அகில இந்திய அளவில் நடைபெற்ற, சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவர் அணி அகில இந்திய அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. மற்ற நான்கு அணிகளும் மூன்றாம் இடத்தை பெற்றன.
நாளை போட்டிகளை பள்ளியின் செயலர் கவிதாசன் தொடக்கி வைக்க உள்ளார்.