/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண்மையில் ஓமியோபதி; பரவலாகி வரும் மருந்து பயன்பாடு
/
வேளாண்மையில் ஓமியோபதி; பரவலாகி வரும் மருந்து பயன்பாடு
வேளாண்மையில் ஓமியோபதி; பரவலாகி வரும் மருந்து பயன்பாடு
வேளாண்மையில் ஓமியோபதி; பரவலாகி வரும் மருந்து பயன்பாடு
ADDED : ஜூலை 13, 2025 11:37 PM
கோவை,; உற்பத்தி குறைபாடு, மண்வள மேம்பாடு, விதைகள் நேர்த்தி ஆகியவற்றுக்கு, ஓமியோபதி மருந்துகள் பயன்படுத்தும் முறை பரவலாகி வருகிறது,'' என, ஆய்வாளரும், ஓமியோபதி மருத்துவருமான பிரேமா கூறினார்.
பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், கடந்த 25 வருடங்களாக, வேளாண்மையில் ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும், இது பரவலாகி வருவதாக, வேளாண்மையில் ஓமியோபதி மருந்துகள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவர் பிரேமா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
வேளாண்மையில் விதை நேர்த்தி என்பது மிகவும் முக்கியம். வேளாண் மருந்துகளில், குறிப்பிட்ட நேரங்களில் விதை நேர்த்தி செய்தால், நல்ல வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
இதில் ஓமியோபதி மருந்துகள் நல்ல பலன் அளிக்கின்றன.
காய்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து, ருசி அதிகரிப்பதோடு, அதன் எடையும் கூடும்.
ஏலக்காய், தென்னை, வாழை உட்பட பல்வேறு பயிர்களில், இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், காய்ப்பு அதிகரிக்கும்.
தற்போது, இந்தியாவிலும் இது குறித்த விழிப்புணர்வும், பயன்பாடும் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களின் பல இடங்களில், அம்மாநில அரசுகளே இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள துவங்கியுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.