/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பவரை தாக்கிய வீட்டு உரிமையாளர்
/
குடியிருப்பவரை தாக்கிய வீட்டு உரிமையாளர்
ADDED : ஜூன் 27, 2025 11:34 PM
போத்தனூர்; கோவை போத்தனூரிலுள்ள ஐஸ்வர்யா கார்டனில் வசிப்பவர். ஜோஸப், 60. இவருக்கும் வீட்டு உரிமையாளர் அன்புராஜ் என்பவருக்குமிடையே, குடிநீர் பிடிப்பதில் தகராறு இருந்து வருகிறது.
இரு நாட்களுக்கு முன், வீட்டின் முன் நின்றிருந்த ஜோஸப்பிடம், வீட்டை காலி செய்ய அன்புராஜ் கூறியுள்ளார். இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அன்புராஜ், இரும்பு ராடால் ஜோஸப்பை தாக்கினார். மேலும் மிரட்டல் விடுத்துச் சென்றார். ஜோஸப் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், அன்புராஜ் மனைவி வாசுகி, ஜோஸப், 60, அவரது மனைவி ஜான்ஸிராணி ஆகியோர் மீது, போலீசில் புகார் செய்தார். இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கிறனர்.