/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தொழிலில் நேர்மை கடைபிடித்தால் வெற்றி நிரந்தரம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
/
'தொழிலில் நேர்மை கடைபிடித்தால் வெற்றி நிரந்தரம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
'தொழிலில் நேர்மை கடைபிடித்தால் வெற்றி நிரந்தரம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
'தொழிலில் நேர்மை கடைபிடித்தால் வெற்றி நிரந்தரம்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 10:58 PM

சூலுார், ; 'செய்யும் தொழிலில் நேர்மையையும், தர்மத்தையும் கடைபிடித்தால் வெற்றி நிரந்தரமாக நம்மிடம் இருக்கும்,' என, வரலாற்று ஆய்வு மைய மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இயக்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி வரலாற்று ஆய்வு மைய மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற தலைப்பில் பேசியதாவது:
'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல.தேசப்பணியோ, ஆன்மிக பணியோ,எந்த பணியாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையையும், தர்மத்தையும் கடைபிடித்தால், வெற்றி நிரந்தரமாக நம்மிடம் இருக்கும்.
உலகம் போற்றும் தொழிலதிபர் ரத்தன் டாட்டா, தன்னிடம் நேர்மையாக பணியாற்றிய அதிகாரியான சுமேந்திரன் என்பவரது பெயரையே, புதிதாக உருவாக்கிய காருக்கு வைத்தார். அதுதான் டாடா சுமோவாக வலம் வருகிறது. அதேபோல், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் பணியாற்றிய இடங்களில், நேர்மையையும், தர்மத்தையும் கடைபிடித்தார். ஜனாதிபதியாக பணியாற்றிய போதும், அவற்றை கடைபிடித்ததால் அழியாத புகழை பெற்றார். இதுபோல், நம் தேசத்தில் பலரும் செய்யும் தொழிலை தெய்வமாக கருதி வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து கொண்டுள்ளனர். சிறிய வேலையாக இருந்தாலும், தொழில் பக்தி, அர்ப்பணிப்பு இருக்கவேண்டும், என, இளைய தலைமுறையினருக்கு கூற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

