/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணிபுரிந்த வீட்டில் நகைகள் திருடிய வீட்டு காவலாளி கைது
/
பணிபுரிந்த வீட்டில் நகைகள் திருடிய வீட்டு காவலாளி கைது
பணிபுரிந்த வீட்டில் நகைகள் திருடிய வீட்டு காவலாளி கைது
பணிபுரிந்த வீட்டில் நகைகள் திருடிய வீட்டு காவலாளி கைது
ADDED : ஜூன் 25, 2025 11:09 PM
கோவை; ஆர்.எஸ்.புரத்தில் பல் மருத்துவர் வீட்டில் தங்கம், வைர நகைகளை திருடிய, வீட்டு காவலாளியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
துடியலுார், ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் எழில் இளநங்கை 47; பல் மருத்துவர். இவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஜன., 18ம் தேதி, எழில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
16ம் தேதி திரும்பி வந்தார். வீட்டில் விட்டுச் சென்ற, 17 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நெக்லஸ் திருட்டு போயிருந்தது. புகாரின்படி, ஆர்.எஸ்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நகைகளை திருடியது, வீட்டு காவலாளி, பூமார்க்கெட்டை சேர்ந்த சதீஷ் குமார், 36 என்பது தெரியவந்தது. போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து, வைர நகைகளை மீட்டனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.