/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலத்தருகே வசித்தவர்களின் வீடுகளுக்கு 'சீல்'; கலெக்டரிடம் புகார்
/
கோவில் நிலத்தருகே வசித்தவர்களின் வீடுகளுக்கு 'சீல்'; கலெக்டரிடம் புகார்
கோவில் நிலத்தருகே வசித்தவர்களின் வீடுகளுக்கு 'சீல்'; கலெக்டரிடம் புகார்
கோவில் நிலத்தருகே வசித்தவர்களின் வீடுகளுக்கு 'சீல்'; கலெக்டரிடம் புகார்
ADDED : ஆக 04, 2025 08:17 PM

கோவை; கோவில் நிலத்தை ஒட்டி அமைந்துள்ள (டி.டி.சி.பி.,) மனையிடத்தில், வீடு கட்டி வசித்து வந்த பத்து வீடுகளுக்கு, அறநிலையத்துறை சீல் வைத்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டரிடம் கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.
கோவை மாதம்பட்டியில், அன்னியூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்ததை, இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் மீட்டது. பதினோரு வீடுகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். வீடுகளை இழந்த மக்கள், நேற்று கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகாரளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
டி.டி.சி.பி., அனுமதியோடு, பத்திரப்பதிவுத்துறையில் பதிவு செய்து உள்ளாட்சி அமைப்பில் கட்டட அனுமதி பெற்று, கட்டடம் கட்டினோம். சொத்து வரி செலுத்தினோம்.
மின்சாரம், குடிநீர் இணைப்பு வைத்துள்ளோம். அதற்கும் கட்டணம் செலுத்தி வருகிறோம். அறநிலையத்துறைக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாங்கள் மேல்முறையீடு செய்வதற்குள், அறநிலையத்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு சீல் வைத்து விட்டனர்.
போதுமான கல்வியறிவு இல்லாததால், எங்களுக்கு 40 ஆண்டுக்கு முன் வீட்டுமனையாக பிரித்து, டி.டி.சி.பி.அப்ரூவல் பெற்று விற்பனை செய்து ஏமாற்றிவிட்டனர். நாங்களும் நீண்ட ஆண்டுகளாக வசிக்கிறோம்.
எங்களுக்கு காலஅவகாசம் வழங்கியிருக்கலாம். ஆனால் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து வீசியதோடு, எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது வேதனையாக இருக்கிறது. சட்டப்படி எங்களிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.