/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலுதவி செய்வது எப்படி? பள்ளி பஸ் விபத்து ஒத்திகை
/
முதலுதவி செய்வது எப்படி? பள்ளி பஸ் விபத்து ஒத்திகை
முதலுதவி செய்வது எப்படி? பள்ளி பஸ் விபத்து ஒத்திகை
முதலுதவி செய்வது எப்படி? பள்ளி பஸ் விபத்து ஒத்திகை
ADDED : செப் 07, 2025 09:24 PM

கருமத்தம்பட்டி; பள்ளி பஸ் விபத்தில் சிக்கினால், மாணவ, மாணவியரை காப்பாற்றி முதலுதவி செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சோமனூர் லயன்ஸ் கிளப், ராயல் கேர் மருத்துவமனை மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், விபத்தில் சிக்கியோரை எப்படி காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கருமத்தம்பட்டி நால் ரோட்டில் நடந்தது.
அன்னுார் ரோட்டில் இருந்து, மாணவ, மாணவியருடன் வந்த பள்ளி பஸ், கருமத்தம்பட்டி ரோட்டில் விபத்தில் சிக்கியது. மாணவர்கள் காயமடைந்து அலறுவதை கேட்டு, பொதுமக்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவது போல், தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர்.
மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. காயமடைந்தவர்களை பக்குவமாக துாக்க வேண்டும். பதட்டத்தில் வேகமாக செயல்படாமல், நிதானத்தை கடைபிடித்து செயல்படவேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.
லயன் கிளப் தலைவர் ரேவதி, செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மயில்சாமி, ஆடிட்டர் முருகசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.