தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஓய்வூதியர்கள் நடத்திய மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியர்கள் நடத்திய மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியர்கள் நடத்திய மனித சங்கிலி போராட்டம்


UPDATED : நவ 20, 2026 03:54 PM

ADDED : நவ 20, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 03:54 PM ADDED : நவ 20, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனிதசங்கிலி போராட்டம், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பலராமன் தலைமை வகித்தார்.

இணை ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் பேசுகையில், ‘‘தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணன், போக்குவரத்து ஒய்வூதியர் சம்மேளன பொறுப்பாளர் குப்புசாமி, கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர் கழக பொறுப்பாளர் ராஜகோபாலன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் வெங்கட சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட 600க்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us