/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐதராபாத் - கொல்லம் வாராந்திர ரயில்; அக்., வரை நீட்டிப்பு
/
ஐதராபாத் - கொல்லம் வாராந்திர ரயில்; அக்., வரை நீட்டிப்பு
ஐதராபாத் - கொல்லம் வாராந்திர ரயில்; அக்., வரை நீட்டிப்பு
ஐதராபாத் - கொல்லம் வாராந்திர ரயில்; அக்., வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 18, 2025 12:20 AM
கோவை; ஐதராபாத் - கொல்லம் இடையேயான வாராந்திர ரயில் வரும், அக்., வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் - கொல்லம் (07193) இடையே வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 11:10 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள் கிழமை காலை 7:10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கொல்லம் - ஐதராபாத் (07194) இடையேயான வாரந்திர ரயில், திங்கள் காலை 10:45 மணிக்கு புறப்பட்டு புதன் மாலை 5:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.
இந்நிலையில் பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து ஐதராபாத் - கொல்லம் (07193) ரயில் வரும், அக்., 11 வரையிலும், கொல்லம் - ஐதராபாத் (07194) ரயில் வரும் அக்., 13ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.