/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
பஸ் நிழற்குடையில் உட்கார முடியவில்லை!
/
பஸ் நிழற்குடையில் உட்கார முடியவில்லை!
ADDED : செப் 08, 2025 06:13 AM

அடிக்கடி விபத்து
தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவில் இருந்து ஜி.என். மில்ஸ் செல்லும் சாலையில், ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் அருகில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் உள்ள குழிகளால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துநடக்கிறது.
- விஷ்ணு, தடாகம்.
போக்குவரத்து பாதிப்பு
கொடிசியா ரோடு, கொடிசியா முதல் விளாங்குறிச்சி ரோடு சந்திப்பு வரை, பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைந்து சாலையில் குழி ஏற்படுகிறது. மோசமான சாலையில், விபத்துகளும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
- ஜெகதீசன், கொடிசியா ரோடு.
வேகத்தடை வேண்டும்
கே.கே.புதுார், சின்னம்மாள் வீதியில், வீடுகள் அதிகம் இருக்கும் பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்குகின்றனர். விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.
- சுவாமிநாதன், கே.கே.புதுார்.
நடை பாதை சேதம்
அவிநாசி ரோடு, 83வது வார்டு, அண்ணா சிலை அருகே, பல இடங்களில் நடைபாதை சிலேப்புகள் பெயர்ந்து குழியாக உள்ளது. நடந்து செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். மழை சமயங்களில் குழிகளில் மழைநீரும் தேங்கி நிற்கிறது.
- பாலகிருஷ்ணன், காந்திபுரம்.
மூடப்படாத குழி
சத்தி மெயின் ரோடு, சரவணம்பட்டி, ஸ்ரீ விலாஸ் ஸ்வீட் கடை அருகே தண்ணீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழியை சரியாக மூடவில்லை. குழியை மூடக்கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
- முருகேஷ், சரவணம்பட்டி.
வலிதரும் ரோடு
பேரூர் செட்டிபாளையம், ஒன்பதாவது வார்டு, ஆபீசர்ஸ் காலனி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. சாலையெங்கும் உள்ள குழிகளால் தினந்தோறும் விபத்து நடக்கிறது.
- ராகவன், பேரூர்.
அதிவேகத்தால் விபத்து
சேரன்மாநகர் முதல் ஹோப்ஸ் காலேஜ் சாலையில் பைக்குகள், கார்கள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் செல்கின்றன. சாலையை கடக்கவே பல மணி நேரம் ஆகிறது. சாலைத்தடுப்புகள், வேண்டிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
- சதீஷ், சேரன்மாநகர்.
நிழற்குடையில் மதுபிரியர்கள்
திருச்சி ரோடு, செயின்ட் பிரான்சிஸ் கான்வென்ட் எதிரில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையில் எப்போதும் சிலர் படுத்து உறங்குகின்றனர். மதுகுடித்துவிட்டு சிலர் இருக்கையில் படுத்துக்கொள்கின்றனர். பயணிகள் சாலையில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.
- முருகேசன், திருச்சி ரோடு.
மூடப்படாத குழிகள்
வெள்ளக்கிணறு பிரிவிலிருந்து சரவணம்பட்டி செல்லும் பாதையில், ரயில்வே லெவல் கிராசிங் அடுத்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னர் குழிகளை சரிவர மூடாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
- கார்த்திக், வெள்ளக்கிணறு.
கான்கிரீட் மேடுகள்
சுந்தராபுரம் முதல் மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில், அபிராமி மருத்துவமனைக்கு சற்று வடக்கு சாலையில் உள்ள குழிகளை கான்கிரீட் கொண்டு சரிசெய்துள்ளனர். இதில், சாலையை விடவும் கான்கிரீட் கலவைகள் மிகவும் உயரமாக உள்ளன. இதனால், இருசக்கர வாகனஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர்.
- முருகநாதன், ராஜம் அவென்யூ.