/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறுதி காலம் வரை இந்தி திணிப்பை எதிர்ப்பேன்
/
இறுதி காலம் வரை இந்தி திணிப்பை எதிர்ப்பேன்
ADDED : ஆக 20, 2025 12:31 AM

சூலுார்; என்னுடைய இறுதி காலம் வரை இந்தி திணிப்பை எதிர்ப்பேன், என, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சூலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ம.தி.மு.க., சார்பில், சூலுார் சீரணி கலையரங்கில், இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், நம் நாட்டுக்கு இரு மொழி கொள்கைதான் சரியாக இருக்கும். இந்தி திணிப்பை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை வலியுறுத்தியே மாணவர் பருவம் முதல் போராடி வருகிறேன். ராஜ்யசபாவில் தொடர்ந்து இந்தி திணிப்பு கூடாது என பேசினேன். வட நாட்டு எம்.பி.,களிடம் ஆதரவு திரட்டினேன்.
60 ஆண்டுகளாக பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறேன். என் இறுதி காலம் வரை இந்தி திணிப்பை எதிர்ப்பேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., வுடன் கூட்டணி என்று முடிவு செய்தோம். அதே வழியில் பயணித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்கிறேன். ராஜ்யசபாவில் என் குரல் ஒலிக்காவிட்டாலும், திராவிடத்துக்காக மக்கள் மன்றத்தில் ஒலிக்கும், என்றார்.

