/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஐந்து விதிகளை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்'
/
'ஐந்து விதிகளை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்'
'ஐந்து விதிகளை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்'
'ஐந்து விதிகளை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்'
ADDED : ஜன 13, 2025 12:17 AM

அன்னுார்,; 'ஐந்து விதிகளை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்,' என பள்ளி ஆண்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.
அன்னுார் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், மாணவ, மாணவியரின் நடனம், நாடகம், மாறுவேட போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சாதித்த மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.
மாணவர்களை வாழ்த்தி, ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேலாளர் கவிதாசன் பேசுகையில், ''மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற, ஒழுக்கம், அறிவுத்திறன், நற்பண்புகள், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் ஆகிய ஐந்து விதிகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தப் பணியை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்,'' என்றார்.
பள்ளி தாளாளர் சுலோச்சனா பார்த்த சாரதி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அனிதா கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிர்வாக அலுவலர் கரி வரதராஜன், பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.