/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
607ல் 119 மனுக்களுக்கு உடனடி தீர்வு
/
607ல் 119 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : ஜூலை 18, 2025 09:20 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' சிறப்பு முகாம் வடுகபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஒன்று மற்றும், இரண்டாவது வார்டு மக்கள் பங்கேற்றனர். நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் கணேசன், தாசில்தார் வாசுதேவன், முகாமினை துவக்கி வைத்தனர்.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை பதிவாளர் அழகிரி, துணை தலைவர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், மகளிர் உரிமைத்தொகை, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்களை பொதுமக்கள் வழங்கினர்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது: நகராட்சியில், 13 அரசுத்துறைகளின், 43 சேவைகள் மற்றும் திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெற, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடக்கிறது. மொத்தம், 14 முகாம்கள் நடத்தப்படுகின்றன. முகாமில், பல்வேறு துறைகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மொத்தம், 607 மனுக்கள் பெறப்பட்டு, 119 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. வரும், 25ல், 3,4 வார்டுகளுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது. இவ்வாறு, கூறினார்.
வால்பாறை
வால்பாறை அடுத்துள்ள, அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. தாசில்தார் மோகன்பாபு துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, பொறியாளர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, காப்பீடு திட்டம்,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் மொத்தம், 387 பேர் விண்ணப்பம் கொடுத்தனர்.

