/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
/
ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ADDED : ஆக 28, 2025 11:05 PM

- நிருபர் குழு -
ஆனைமலையில், 13 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆனைமலை பகுதியில், 206 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் சிறப்பு வழிபாட்டுக்கு பின், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
அதன்படி, நேற்று பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஆங்காங்கே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வால்பாறை சரகத்துக்கு உட்பட்ட, ஆனைமலையில் ஹிந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட 13 சிலைகள், ஆனைமலை உப்பாறு பகுதியில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
உடுமலை ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில், குடிமங்கலம் வட்டாரத்தில், 20 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, விசர்ஜன ஊர்வலம், பொதுக்கூட்டம், பெதப்பம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் நடந்தது.
மாநில செயலாளர் ரமணன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் பாலாஜி, மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.