/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'2022க்கு பின் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது'
/
'2022க்கு பின் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது'
'2022க்கு பின் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது'
'2022க்கு பின் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது'
ADDED : பிப் 04, 2024 12:01 AM

கோவை;கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் குகன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி, புற்று நோய்கள் குறித்த பல தகவல்கள் அடங்கிய டைனமிக் கியூஆர் (QR) குறியீடு மற்றும் பெண்களுக்கான ஓர் ஆண்டு இலவச மேமோகிராம் சிகிச்சை திட்டத்தை, தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், டாக்டர் குகன் பேசுகையில்,- ''இந்தியாவில் 2022க்கு பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், நம் நாட்டில் இந்நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அவசியம்,'' என்றார்.