/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மருத்துவ முகாம் நடத்தணும்!
/
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மருத்துவ முகாம் நடத்தணும்!
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மருத்துவ முகாம் நடத்தணும்!
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மருத்துவ முகாம் நடத்தணும்!
ADDED : ஜன 21, 2025 10:14 PM
வால்பாறை,; வால்பாறையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, காலை, மாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவுவதாலும், இரவு நேரத்தில் நிலவும் கடுங்குளிராலும் மக்கள் பரிதவிக்கின்றனர். இதனால் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், பருவமழைக்கு பின் கடுங்குளிர் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் முதியவர் வரை காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பயன்பெறும் வகையில், அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்,' என்றனர்.