/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டுக்கூடு விலை அதிகரிப்பு; உற்சாகத்தில் விவசாயிகள்
/
பட்டுக்கூடு விலை அதிகரிப்பு; உற்சாகத்தில் விவசாயிகள்
பட்டுக்கூடு விலை அதிகரிப்பு; உற்சாகத்தில் விவசாயிகள்
பட்டுக்கூடு விலை அதிகரிப்பு; உற்சாகத்தில் விவசாயிகள்
ADDED : ஜூலை 28, 2025 09:32 PM

கோவை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டு நுால் தேவை அதிகரித்து இருப்பதால், பட்டுக்கூடு விலை அதிகரித்துள்ளது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுகல், தேனி விவசாயிகள் பட்டுக்கூடுகளை இங்கு கொண்டு வந்து விற்கின்றனர்.
மாதம் 25 டன் பட்டுக்கூடு வருகிறது. இரண்டு மாதமாக மிதமான குளிர்ந்த வெப்பநிலை நிலவுவதால் பட்டுக்கூடு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே சமயம், தீபாவளிக்கான பட்டு ஆடை தயாரிப்பும் வேகம் பிடித்துள்ளதால், பட்டுக்கூடு விலை உயர்ந்துள்ளது.
முதல் தர பட்டுக்கூடு நேற்று கிலோ 630 ரூபாய்க்கும், அடுத்த தரம் 513 ரூபாய்க்கும் விற்பனையானது. பட்டு நுால் ஒரு கிலோ 4509 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 520 ரூபாய் அதிகம்.
பட்டு அங்காடி அதிகாரிகள் கூறுகையில், 'ஆடி மாதம் காற்று அதிகம் வீசுவதால், பட்டுக்கூடு உற்பத்தி அதிகரிக்கும். வெப்பநிலையும் நன்றாக உள்ளது. அதனால் உற்பத்தி உயர்ந்துள்ளது. பண்டிகை நெருங்குவதால் பட்டு நுாலுக்கு டிமாண்ட் ஏற்பட்டு, பட்டுக்கூடு விலை அதிகரித்துள்ளது. இதனால் பட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்றனர்.