/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி
/
பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி
பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி
பயணிகள் எண்ணிக்கை பெருகி விமான நிலையத்தில் நெருக்கடி
ADDED : ஏப் 20, 2025 01:55 AM
கோவை:பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கடந்தாண்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான நிறுவனங்கள் தங்களது சேவையை விரிவுபடுத்தின.
இதன் காரணமாக, விமான பயணிகள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூடுதல் பயணிகள் பயன்படுத்தும் வகையில், வசதிகள் ஏற்படுத்த பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மறுசீரமைப்பு மேற்கொள்ள, விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.68 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிக பயணிகள் வந்ததால், பயணிகள் சிரமப்பட்டனர்.
கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஸ் கூறுகையில், ''பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டுகளை விட அதிகரித்துள்ளது. அமரக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,'' என்றார்.