/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகரிக்கும் பூச்சிகள் தொல்லை; வீடுகளை காலி செய்யும் மக்கள் வீடுகளை காலி செய்யும் மக்கள்

ADDED : மே 14, 2025 11:48 PM
அன்னுார்; அன்னுார் பேரூராட்சி, குன்னத்தூராம் பாளையத்தில், 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு தனியார் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து அதிகளவில் பூச்சிகள் வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராமத்தின் கிழக்குப் பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் துன்பத்தை சந்தித்து வருகிறோம். ஆலையில் இருந்து உமி பறந்து வந்து உணவு பொருட்கள், குடிநீர் ஆகியவற்றில் விழுந்து விடுகிறது.
நூற்றுக் கணக்கான செல் பூச்சிகள் பறந்து வந்து கடிக்கின்றன. ஆலையில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. பலர் நோய் வாய்ப்பட்டு விட்டனர். இரண்டு குடும்பங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர் சென்று விட்டன.
இதுகுறித்து அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டத்தில் இரண்டு முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.