/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
/
பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 15, 2025 09:12 PM

கோவை; கோவையில் பள்ளி, கல்லுாரிகளில், 79வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
ஆர்.கே.வி. சீனியர் செகண்டரி பள்ளி பாலக்காடு ரோடு, குனியமுத்துார், இடையர்பாளையம் பிரிவில் உள்ள, ஆர்.கே.வி. சீனியர் செகண்டரி பள்ளியில், மதுக்கரை ராணுவ முகாம் சுபேதார் குப்பன் சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவியர் சுதந்திர தினம் குறித்து பேசினர்.
மாணவர்களின் அணிவகுப்பு, நடனம், பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநில அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் தர்மக்கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி சீரபாளையத்தில் உள்ள வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், பள்ளி தாளாளர் ஓம் சரவணன், தலைவர் சிவகுமார், இயக்குனர் சுதர்ஷன் ராவ் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். சுதந்திர தினவிழா முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கண்காட்சி நடந்தது. இதில், பைக் சவாரி, ஷூட்டிங் ரேஞ்ச், 3டி நிகழ்ச்சி, விண்வெளி அருங்காட்சியகம், வில்வித்தை, விளையாட்டு கடைகள், மாயாஜால நிகழ்ச்சி, ரயில் சவாரி, அலுவலகப் பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
அட்சயா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி தடாகம் ரோடு, பன்னீர்மடையில் உள்ள அட்சயா அகாடமி சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவுக்கு, பாரதியார் பல்கலை உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைமை பேராசிரியர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.
சுதந்திர போராட்டம் குறித்த, நடனம், மவுன நாடகம், குறு நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவ, மாணவியர் பல்வேறு மாநிலங்களின் கலாசார ஆடைகளை அணிந்து அணிவகுப்பு நடத்தினர்.
பள்ளி நிறுவனர் புருேஷாத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரி சரவணம்பட்டியில் உள்ள, சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி செயலாளர் ராமசந்திரன் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினார்.
அவர் பேசுகையில், ''இன்றைய தலைமுறையினர் தேசபக்தியுடன் செயல்பட வேண்டும். சிறந்த குடிமக்களாக நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். நம்நாடு வல்லரசாக ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.
கல்லுாரி தமிழ்துறை சார்பில் நடந்த கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி இணை செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், அறங்காவலர் பட்டாபிராமன், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், சங்கரா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட சங்கரா கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
நேரு மகா வித்யாலயா கல்லுாரி மலுமிச்சம்பட்டியில் உள்ள, நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரியில், இந்திய ராணுவ முன்னாள் கேப்டன் மேத்யூஸ் தேசியக்கொடி ஏற்றி, சிறப்புரையாற்றினார். கல்லுாரி தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு நடந்தது. என்.எஸ்.எஸ். சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சுதந்திர தினம் முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது.
கல்லுாரி தலைவர் மகாவீர் போத்ரா, செயலாளர் சுனில்குமார் நஹாடா, துணை செயலாளர் பரத்குமார் ஜெகமணி, கோவை நல சங்க உறுப்பினர்கள் ஷீதல் மேத்தா, அபை ஜெயின், கல்லுாரி முதல்வர் சுப்ரமணி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.