/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூழல் மசோதாவை ரத்து செய்ய கோரி 'இண்டியா' கூட்டணி உண்ணாவிரதம்
/
சூழல் மசோதாவை ரத்து செய்ய கோரி 'இண்டியா' கூட்டணி உண்ணாவிரதம்
சூழல் மசோதாவை ரத்து செய்ய கோரி 'இண்டியா' கூட்டணி உண்ணாவிரதம்
சூழல் மசோதாவை ரத்து செய்ய கோரி 'இண்டியா' கூட்டணி உண்ணாவிரதம்
ADDED : பிப் 13, 2025 10:06 PM

வால்பாறை; சூழல் நுண் உணர்வு மசோதாவை ரத்து செய்ய கோரி, 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
'இண்டியா' கூட்டணி கட்சிகளின் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, எல்.பி.எப்., தொழிற்சங்க மாநில செயலாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி., பொதுசெயலாளர் கருப்பையா, எல்.எல்.எப்., தொழிற்சங்க தலைவர் வீரமணி, எம்.எல்.எப்., தொழிற்சங்க தலைவர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க பொதுசெயலாளர் மோகன் வரவேற்றார்.
போராட்டத்தில், வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள, சூழல் நுண் உணர்வு மசோதா வரைவு அறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வால்பாறையில் தேயிலை தொழில், வியாபாரம், சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். ஒட்டு மொத்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவை, மக்கள் நலன் கருதி மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், என, வலியுறுத்தி பேசினர்.
நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன், நகர செயலாளர் சுதாகர், சி.ஐ.டி.யு, பொதுச்செயலாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் குமார் நன்றி கூறினார்.
மாணவர்கள் தவிப்பு
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை ஒட்டியுள்ள கட்டடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று நடந்தது.
தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளின் கீழ், 228 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், பள்ளி அருகில் காலை முதல் மாலை வரை 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்கள் மைக் பிடித்து மசோதா குறித்து பேசியதால், மாணவர்கள் தேர்வை அமைதியான முறையில் எழுத முடியாமலும், பிற மாணவர்கள் படிக்க முடியாமலும் தவித்தனர்.

