/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு வரும் 8ல் கோவையில் துவங்குகிறது
/
இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு வரும் 8ல் கோவையில் துவங்குகிறது
இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு வரும் 8ல் கோவையில் துவங்குகிறது
இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு வரும் 8ல் கோவையில் துவங்குகிறது
ADDED : செப் 05, 2025 10:57 PM
கோவை: 'இந்தியா டுடே' தென்னிந்திய மாநாடு, கோவை லீ- மெரிடியன் ஹோட்டலில், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. நமது பாரம்பரியத்தை பாதுகாத்து, நிர்வாகத்தை வலுப்படுத்தி, ஆக்கப்பூர்வ உணர்வை ஊக்குவித்து, பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்க, தென்னிந்தியாவின் செல்வாக்குமிக்க பல குரல்களை ஒன்றிணைக்கும் வகையில், இம்மாநாடு நடத்தப்படுகிறது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், ஆந்திர மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரலோகேஷ் பங்கேற்கின்றனர். மேலும், தமிழக அமைச்சர்கள் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மகேஷ், கேரள உள்ளூர்சுய நிர்வாகம் மற்றும் சுங்க வரி அமைச்சர் ராஜேஷ், தெலுங்கானா சட்டமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீதர்பாபு, கர்நாடக துவக்கக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர் பங்கேற்று முக்கிய ஆலோசனை மற்றும் குழு விவாதங்கள் நடக்கின்றன. இந்திய பார்முலா-1 ரேசிங் வீரர் நரேன் கார்த்திகேயன், காந்தாரா அத்தியாயம் - 1 நாயகி ருக்மணி வசந்த் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்று, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தமும், தொகுதிகள் மறுசீரமைப்பும் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. ஜாதிவாரியான ஆய்வு, தென்னிந்தியாவில் தொழிற்பகுதியில் வர்த்தக வரிகளின் தாக்கம், தென்னக ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
விவாதங்களைத் தாண்டி, கருத்துக்களை உருவாக்கி, பிராந்தியத்தின் புவியியல், அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பண்பாடு, சமூக முன்னேற்றம் மீதான உரையாடல்களை நடத்தும் இம்மாநாட்டில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். www.indiatodayconclave. com என்ற இணையத்தில் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.