/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று நிறைவடைகிறது இந்தியன் ரேஸிங் விழா
/
இன்று நிறைவடைகிறது இந்தியன் ரேஸிங் விழா
ADDED : ஆக 16, 2025 11:21 PM
போத்தனூர்; கோவையில் தேசிய ரேஸிங் விழா - 2025 நேற்று துவங்கியது: இன்று நிறைவடைகிறது.
செட்டிபாளையத்திலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நேற்று துவங்கிய பந்தயத்தில் வீரர்கள் வெற்றி வாகை சூட ஒருவருக்கொருவர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி முந்திச் செல்ல முயன்றனர்.
இதில் இந்தியன் ரேஸிங் முதல் சுற்றின் முடிவில், கோவா ஏசஸ் அணியின் ரவுல் ஹைமன், பெங்களூரு கிச்சாஸ் கிங்ஸ் அணியின் கைல் குமரன், சென்னை டர்போ ரைடர்ஸ் அணியின், அகில் அலிபாய் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஜே.கே.டயர், எப்.எம்.எஸ்.சி.ஐ.யின் தேசிய பந்தய சாம்பியனுக்கான முதல் பந்தயத்தில் துருவ் கோஸ்வாமி, தில்ஜித், பால பிரசாத் ஆகியோரும் இரண்டாம் பந்தயத்தில், மெஹுல் அகர்வால், சரண் விக்ரம், துருவ் கோஸ்வாமி ஆகியோரும் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
இன்று நிறைவு நாள் பந்தயங்கள் நடக்கின்றன.