/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் தொழில் கடன் முகாம்
/
கலெக்டர் அலுவலகத்தில் தொழில் கடன் முகாம்
ADDED : பிப் 22, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க மற்றும் ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த விரும்பும், தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் எளிதாக கடனுதவி பெறும் பொருட்டு, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில், தொழில் கடன் வசதியாக்கல் முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (23ம் தேதி) நடத்தப்படுகிறது.
அனைத்து வங்கிகளின் மண்டல அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இம்முகாமில் பங்கேற்று, தொழில் கடன் பெறுவதற்கான உதவி மற்றும் ஆலோசனை பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.