/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்
/
வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்
வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்
வாடல் நோய் பாதித்த தென்னைக்கு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2024 05:18 AM
பொள்ளாச்சி : 'வாடல் நோய் பாதித்த தென்னை மரம் ஒன்றுக்கு, இரண்டாயிரம் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும்,' பாலக்காடு மாவட்ட காங்., துணை தலைவர் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட காங்., துணை தலைவர் சுமேஷ் அச்சுதன் அறிக்கை வருமாறு:
சித்துார் தாலுகாவில், கேரளா வாடல் நோய் காரணமாக இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிந்து விட்டன. நோய் வந்த மரங்களில் காய்ப்பு இல்லாததால், எல்லா மரங்களும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
தென்னை ஓலைகளில் மஞ்சள் நிறமாகி, படிப்படியாக தேங்காய் உற்பத்தி குறைந்து அடியோடு மடிந்து விடுகிறது.
ஒரு தென்னை மரத்தில் இருந்து ஆண்டுக்கு விவசாயிகளுக்கு குறைந்தது, மூவாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். நோய் பாதித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தவும், புதிய தென்னங்கன்று நடுவதற்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. புதிய தென்னை மரங்கள் காய்ப்புக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகும்.
இதனை கணக்கிட்டு, வாடல் நோய் பாதித்த தென்னை மரத்துக்கு, இரண்டாயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த நோய்க்கான மருந்தை, அரசு, தனியார் துறையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இந்த நோய் காரணமாக, ஒவ்வொரு ஊராட்சியிலும் எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்கிற கணக்கும் அரசு தரப்பில் இல்லை. இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

