/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளை கண்காணிக்க ஏ.ஐ., கேமரா நிறுவும் பணி
/
யானைகளை கண்காணிக்க ஏ.ஐ., கேமரா நிறுவும் பணி
ADDED : பிப் 05, 2024 01:28 AM
கோவை;கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில், பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
யானைகளின் வலசை காலம் என்பதால், அதிகளவு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன. இரவில், வீடுகளுக்குள் புகுந்து அரிசி, மாவு ஆகியவற்றையும் ருசி பார்க்கின்றன. மாவட்ட வனத்துறை யினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, துடியலூர், தடாகம் வனப்பகுதிகளில் யானைகளை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப(ஏ.ஐ.,)கேமரா பயன்படுத்தும் சோதனை முயற்சி துவங்கியுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'குறிப்பிட்ட தூரத்தில் வனவிலங்குகள் வரும் போதே, எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும். யானைகள் வனத்திற்குள் சென்று விடும். தற்போது பரீட்சார்த்த முறையில் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. யானைகள் எந்த சத்தத்துக்கு அச்சம் அடைகின்றன என்பதை கண்டறிந்து, அந்த சத்தம் பயன்படுத்தப்படும்' என்றனர்.

