ADDED : மார் 17, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம் மார்ச் 17-: -: மேட்டுப்பாளையம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், துப்பாக்கிகளை வைத்திருப்போர் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பில்லுார் டேம், அன்னூர் உட்பட 5 போலீஸ் ஸ்டேஷன்களில், தனி நபர்கள் உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
போலீசார் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில், சுமார் 55க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றனர்.
