/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவருக்கு ரூ.13.5 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
/
முதியவருக்கு ரூ.13.5 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
முதியவருக்கு ரூ.13.5 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
முதியவருக்கு ரூ.13.5 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : ஜூலை 30, 2025 09:01 PM
கோவை; இருதய அறுவை சிகிச்சை செய்த முதியவருக்கு, 13.5 லட்சம் ரூபாய் மருத்துவ சிகிச்சை தொகை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப் பட்டது.
கோவை, செட்டி பாளையத்தை சேர்ந்தவர் கொண்டசுவாமி,69, ஸ்டார் ெஹல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்தார். அதற்கான பிரீமிய தொகை, 2023, மார்ச் 16ல், மூன்று ஆண்டுக்கு சேர்த்து, ரூ.2.23 லட்சம் செலுத்தினார்.
2024, ஜூன் 9ல், அவர் திருச்சிக்கு சென்ற போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மீண்டும் கோவைக்கு வந்த அவருக்கு, சில மாதங்கள் கழித்து மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருதய பாதிப்பு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 12.84 லட்சம் ரூபாய் செலவானது.
இத்தொகையினை வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்தது. இழப்பீடு கோரி, கோவை கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
'மனுதாரருக்கு முன் நோய் பாதிப்பு இருந்துள்ளதாகவும், உண்மையை மறைத்து மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளதால் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றும், இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான செலவு தொகை, 12.84 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 20,000 ரூபாய் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.