/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு பகுதியில் பருத்தி சாகுபடி தீவிரம்
/
கிணத்துக்கடவு பகுதியில் பருத்தி சாகுபடி தீவிரம்
ADDED : ஜன 17, 2025 11:46 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், பரவலாக பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், செட்டியக்காபாளையம் பகுதியில் நடராஜ் என்ற விவசாயி பருத்தி சாகுபடியில் அசத்தி வருகிறார்.
நடராஜ் கூறியதாவது:
தோட்டத்தில், 75 சென்ட் பரப்பளவில் டி.சி.ஹெச்., வகை பருத்தி சாகுபடி செய்து வருகிறோம். தற்போது, ஐந்து மாதம் நிறைவடைந்து, காய்கள் வெடிக்க துவங்கியுள்ள நிலையில், பருத்தி எடுப்பை துவங்கியுள்ளோம். இதுவரை, 150 கிலோ வரை பருத்தி எடுத்துள்ளோம். நாளொன்றுக்கு, 40 கிலோ வரை பருத்தி எடுக்கிறோம்.
பருத்திக்கு, கிணற்று நீரை பயன்படுத்தி, மாதம் இருமுறை பாசனம் செய்யப்படுகிறது. தற்போது வரை விதை, நடவு, உரம் மற்றும் இதர பராமரிப்பு என, 25 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.
பருத்தி ஒரு கிலோ தற்போது 100 முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதே விலைக்கு விற்றால், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும். இவ்வாறு, கூறினார்.