/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகள் இடையேயான செஸ் மாணவ, மாணவியர் அசத்தல்
/
பள்ளிகள் இடையேயான செஸ் மாணவ, மாணவியர் அசத்தல்
ADDED : டிச 11, 2025 06:48 AM
கோவை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, ஜி.டி., பள்ளியில் நடந்தது. இதில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் இருந்து பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியானது, எல்.கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்பு வரை, இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை, ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை, எட்டாம் வகுப்பு முதல், 11ம் வகுப்பு வரையிலான பிரிவுகளில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, போட்டிகளை துவக்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜி.டி.பள்ளி முதல்வர் விமலா, கோயம்புத்துார் மாவட்ட செஸ் சங்க செயலாளர் தனசேகர் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.

