sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பல்கலைகள் இடையேயான யோகாசன போட்டி

/

பல்கலைகள் இடையேயான யோகாசன போட்டி

பல்கலைகள் இடையேயான யோகாசன போட்டி

பல்கலைகள் இடையேயான யோகாசன போட்டி


ADDED : டிச 30, 2024 12:08 AM

Google News

ADDED : டிச 30, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஒடிசாவில் நடந்த அகில இந்திய அளவிலான யோகா போட்டியில், பாரதியார் பல்கலை அணி வீராங்கனை வெள்ளி வென்று, பெருமை சேர்த்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள, கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் கடந்த, 24 முதல், 28ம் தேதி வரை அகில இந்திய அளவிலான யோகா போட்டி நடந்தது.

பாரதியார் பல்கலை அணி சார்பில்,பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த இரு மாணவர்கள், எட்டு மாணவியர் என, 10 பேர் பங்கேற்றனர்.

இதில், குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி மாணவி வைஸ்ணவி, 'ரிதமிக்' யோகாவில் வெள்ளி வென்று பல்கலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதாவது, இசையை பின்புலமாக கொண்டு, 1.30 நிமிடங்களில், எட்டு ஆசனங்களை நடனமாக வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

கடந்த, 15 ஆண்டுகளுக்குபிறகு, முதல் முறையாக பல்கலை அணி பங்கேற்ற யோகா போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து மாணவி வைஸ்ணவி வெள்ளி வென்றுள்ளார்.

இவருக்கு,பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர், உடற்கல்வி இயக்குனர்கள்பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us