தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தக்காளியில் ஊடுபயிர் பராமரிப்பு

தக்காளியில் ஊடுபயிர் பராமரிப்பு

தக்காளியில் ஊடுபயிர் பராமரிப்பு


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 09:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 09:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு தக்காளி பிரதான சாகுபடியாக உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இச்சாகுபடியில், பூச்சி நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தாவிட்டால், மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, அதிக செலவிட்டு ரசாயன மருந்துகளை தெளித்து பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்துகின்றனர். இதனால், சாகுபடி செலவு பல மடங்கு அதிகரிக்கிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, வரப்பு பயிர்களாக மக்காச்சோளம், செண்டுமல்லி உள்ளிட்ட பயிர்களை நட்டு பராமரிக்க தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். இப்பயிர்கள் எளிதாக பூச்சிகளை கவரும்.

இதனால், பிரதான பயிர்களில் தாக்குதல் வெகுவாக குறையும். எத்தகைய பூச்சிகள் பயிர்களை தாக்குகிறது என்பதையும் எளிதில் கண்டறிய முடியும்.

தற்போதைய சீசனில் தக்காளி சாகுபடியில் ஊடுபயிராகவும், வரப்பு பயிராகவும் செண்டுமல்லி செடிகளை பராமரித்து, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

செண்டுமல்லி பூக்கும் போது பூச்சிகள் அச்செடிகளை தாக்கும். அப்போது பிரதான பயிரான தக்காளிக்கு நோய்த்தடுப்பு முறைகளை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us