ADDED : ஜூலை 13, 2026 08:39 AM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில் 'எதிர்கால வேளாண்மை; காலநிலை நுண்ணறிவு மற்றும் காலநிலை தாங்கும் வேளாண் தீர்வுகள்' என்ற சர்வதேச மாநாடு நடந்தது.
காலநிலை இடர்பாடு மேலாண்மைக்கான நுண்ணறிவு, காலநிலைத் தாங்கும் பயிர் மேம்பாடு, நீர்- சிக்கன வேளாண்மைக்கான தீர்வுகள், நிலையான மண் வளத்திற்கான ஊட்டச்சத்து மற்றும் கார்பன் மேலாண்மை, காலநிலைச் சார்ந்த பூச்சி மற்றும் நோய் முன்னெச்சரிக்கை, மற்றும் வேளாண் ஆலோசனை மற்றும் சந்தைத் தகவல் பரவலுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முக்கிய கருப்பொருட்களில் கலந்துரையாடல்கள் நடந்தன.
இதுதவிர, வானிலை நிகழ்வுகளுக்கான டிஜிட்டல் வானிலைச் சேவைகள், காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வேளாண் உத்திகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
