/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச கராத்தே பயிற்சி முகாம்
/
சர்வதேச கராத்தே பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 08, 2025 10:48 PM

கோவை; ஐ.ஒ.ஜி.கெ.ஓ., மற்றும் கென்கோ மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், இரண்டு நாட்கள் சர்வதேச கராத்தே பயிற்சி முகாம், கோவை சக்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், கராத்தே பயிற்சியாளர் பிரமோஷ் தலைமையில் நடந்தது.
பயிற்சி முகாமில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மூத்த கராத்தே பயிற்சியாளர் சென்செய் பீட்டர் ஆர்ம்ஸ், சர்வதேச கட்டா பயிற்சியாளர் ரெய்ன் ஆர்ம்ஸ், சர்வதேச குமித்தே பயிற்சியாளர் பால் ஸ்டோல்சட் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தமிழகம் மற்றும் கேரளா பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
முகாம் துவக்கவிழாவில், சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர்ஜோதிமணி சண்முகசுந்தரம், யு.ஜி.கே.எப்., அகில இந்திய தலைவர் சென்செய் பவார், இதழ் பப்ளிக் பள்ளி தாளாளர்வனிதா, துளசி சிட்பண்ட்ஸ் உரிமையாளர் துளசி தயாளன், வாசம் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் அயினிக்கல் சசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.