/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.பி., கல்லுாரியில் இணைய பாதுகாப்பு மையம்
/
என்.ஜி.பி., கல்லுாரியில் இணைய பாதுகாப்பு மையம்
ADDED : பிப் 18, 2025 11:30 PM

கோவை; டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரியில், கோவையின் முன்னணி இணையப் பாதுகாப்பு நிறுவனமான, ஹேக்அப் டெக்னாலஜியுடன் இணைந்து நிறுவப்பட்ட, அதிநவீன இணையப் பாதுகாப்பு மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது.
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மையத்தை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ''நகரத்தின் இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். விழிப்புணர்வுக்கு இதுபோன்ற சைபர் செக்யூரிட்டி சிறப்பு மையம் உறுதுணையாக இருக்கும்,'' என்றார்.
கல்லுாரி தலைவர் டாக்டர் நல்ல பழனிச்சாமி, செயலாளர் டாக்டர் தவமணி, இயக்குனர் மதுரா, ஹேக்அப் டெக்னாலஜியின் நிறுவனர் தினேஷ் பரந்தகன், கல்லுாரி முதல்வர் பிரபா ஆகியோர் பங்கேற்றனர்.

