/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில் நேர்காணல்
/
அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில் நேர்காணல்
ADDED : ஏப் 17, 2025 11:51 PM

கோவை; அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில் நடந்த நேர்காணலில் ஏராளமான மாணவியர் பங்கேற்றனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தது.நேர்காணலில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளிக்குழுமங்களின் தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நேர்காணலில், கற்பித்தல் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 70 மாணவியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் சாமி வீரப்பா வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி இணைப்பேராசிரியர் யுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.