/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மெட்டா இன்னோவா' கற்றல் மேலாண்மை தளம் அறிமுகம்
/
'மெட்டா இன்னோவா' கற்றல் மேலாண்மை தளம் அறிமுகம்
ADDED : ஜன 31, 2026 06:51 AM
கோவை: மெட்டாசேஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் ' மெட்டாஇன்னோவா' கற்றல் மேலாண்மை தளம் பச்சாபாளையம், கிக்கானி குளோபல் அகாடமி வளாகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான முழுமையான கற்றல் தளமாக 'மெட்டாஇன்னோவா' வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுகவிழாவையொட்டி, 'மெட்டா இன்னோவா பியூஷன் 1.0' என்ற தலைப்பில் தொழில்நுட்ப விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. புதுமை, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும், அமர்வுகளும் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிக்கானி குளோபல் அகாடமி முதல்வர் ஷாலினி நாயர், தாளாளர் துஷார் கிக்கானி, ஐ ஜென் நிறுவன தலைவர் ரமேஷ், நாஸ்காம் இயக்குனர் உதய சங்கர், பாரடே ஓசோன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன், மெட்டாசேஜ் மேலாண்மை இயக்குனர்கள் ஜெயக்குமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புட்நோட்: கிக்கானி குளோபல் அகாடமி பள்ளியில் நடந்த தொழில்நுட் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

