/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிஷ்யூ வேட்டி, சர்ட்டுகள் ராம்ராஜ் காட்டன் அறிமுகம்!
/
டிஷ்யூ வேட்டி, சர்ட்டுகள் ராம்ராஜ் காட்டன் அறிமுகம்!
டிஷ்யூ வேட்டி, சர்ட்டுகள் ராம்ராஜ் காட்டன் அறிமுகம்!
டிஷ்யூ வேட்டி, சர்ட்டுகள் ராம்ராஜ் காட்டன் அறிமுகம்!
ADDED : அக் 26, 2024 11:27 PM

கோவை: ஒவ்வொரு முக்கிய பண்டிகைக்கும் ஒரு புதிய வேட்டி, சட்டை ரகத்தை அறிமுகம் செய்யும் ராம்ராஜ் காட்டன், இந்த தீபாவளிக்கு தமிழகத்தில், 9 வண்ணங்களில் டிஷ்யூ ரக வேட்டிகள் மற்றும் சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. திருப்பூர் ராம்ராஜ் காட்டன் தலைமையகத்தில், அதன் நிறுவனர் நாகராஜன் புதிய ரகங்களை அறிமுகம் செய்தார்.
ஜரிகை வேட்டிகள் மற்றும் சட்டைகள் காப்பர், ராமர் பச்சை, கோல்ட், ரோஸ் கோல்ட், லாவண்டர், சியான், மாஸ் பச்சை, சில்வர் மற்றும் ஸ்டீல் பச்சை ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. அனைத்து வயதினருக்கும் வேட்டிகள், சட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சங்கல்பம், 2 மீ., டிஷ்யூ செட் ரூ.1,550(அரைக்கை), ரூ. 1,650(முழுக்கை), சங்கல்பம் 2 மீ., அட்ஜஸ்ட் டபுள் டிஷ்யூ செட் ரூ.1,650(அரைக்கை) மற்றும் ரூ.1,800(முழுக்கை), கல்ச்சர் கிளப் மாச்சோ டிஷ்யூ கலர் சர்ட் மற்றும் மேட்சிங் பார்டர் வேட்டி செட் ரூ.1,600(அரைக்கை) மற்றும் ரூ.1,700(முழுக்கை) ஆகிய விலைகளில் கிடைக்கின்றன.