/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
/
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 25, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கணுவக்கரை ஊராட்சியில் நடைபெற்ற 100 நாள் வேலைத்திட்ட பணிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை வட்டார வள அலுவலர் இம்மானுவேல் தலைமையில் தணிக்கையாளர்கள் அளவீடு செய்தனர்.
இதையடுத்து, இன்று சமூக தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நாளை (27ம் தேதி) காலை 11:00 மணிக்கு கணுவக்கரை ஊராட்சி அலுவலகம் முன் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், செய்யப்பட்ட பணிகளின் ஆட்சேபனைகள் குறித்த சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது.
'பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம்,' என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா தெரிவித்துள்ளார்.