UPDATED : நவ 16, 2026 04:41 PM
ADDED : நவ 16, 2026 04:38 PM
அ நிறம் | அளவு
கோவை: அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை காலம். அக்டோபரில் மழை இருந்தது. இம்மாதம் எதிர்பார்த்த மழை இல்லை.
சிறுவாணி அணை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டாரத்தில் மழை இல்லை. இருப்பினும் குடிநீர் தேவைக்காக 7 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது. 40.61 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது.
‘21 வரை மழை இருக்காது. 22க்கு பின் கொங்கு மண்டலத்தில் மழை விட்டு விட்டு பெய்யும். டிசம்பரிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது’ என்கின்றனர் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
