/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் தற்காப்பு, சிலம்பத்துடன் யோகாவும் சேர்த்தால் பயன் அதிகம்
/
பள்ளிகளில் தற்காப்பு, சிலம்பத்துடன் யோகாவும் சேர்த்தால் பயன் அதிகம்
பள்ளிகளில் தற்காப்பு, சிலம்பத்துடன் யோகாவும் சேர்த்தால் பயன் அதிகம்
பள்ளிகளில் தற்காப்பு, சிலம்பத்துடன் யோகாவும் சேர்த்தால் பயன் அதிகம்
ADDED : நவ 20, 2025 02:51 AM
கோவை: அரசு பள்ளிகளில் மாணவிகளுக்காக வழங்கப்பட்டு வரும், மூன்று மாத தற்காப்பு கலைப் பயிற்சி இம்மாதத்துடன் நிறைவடையும் நிலையில், பள்ளிகளில் யோகா வகுப்புகளை தொடங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தின் 183 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், 202 நடுநிலைப் பள்ளிகளிலும் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் ஆகிய தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குழுவுக்கு 40 மாணவிகள் வீதம் மொத்தம் 5,840 மாணவிகள் பயிற்சி பெற் றுள்ளனர்.
கல்வி இணைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, பள்ளிகளில் அடிப்படை யோகா பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. தற்போது நடை பெறுவதில்லை.
சில அரசுப்பள்ளிகளில், தன்னார்வல அமைப்பின் உதவியால், யோகா மற்றும் தியான பயிற்சி வழங்கப்படுகிறது. இது போல் அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவிகளுக்கு வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் என தற்காப்பு பயிற்சி, மூன்று மாதத்திற்கு 24 வகுப்புகளாக நடத்தப்பட்டன. இதனுடன், யோகா போன்ற கல்வி இணைச் செயல்பாடுகள் தொடர்ச்சியாக இருந்தால், மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்' என்றனர்.

