/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சம்பளம் வாங்கி 12 வாரம் ஆச்சு; 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
/
சம்பளம் வாங்கி 12 வாரம் ஆச்சு; 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
சம்பளம் வாங்கி 12 வாரம் ஆச்சு; 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
சம்பளம் வாங்கி 12 வாரம் ஆச்சு; 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஜன 28, 2024 11:28 PM
அன்னுார்:கோவை மாவட்டத்தில், 12 வாரங்களாக, சம்பளம் வழங்காததால், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில், அன்னூர், எஸ்.எஸ்.குளம், காரமடை, சூலுார், பெரியநாயக்கன்பாளையம் உள்பட 12 ஒன்றியங்களில், 228 ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது.
குளம் துார்வாருதல், சாலை அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை தினமும் 15,000 பேர் செய்து வருகின்றனர். தினசரி சம்பளமாக 294 ரூபாய் வழங்கப்படுகிறது. பதிவு செய்து, வேலை அட்டை பெற்ற கிராம ஊராட்சியில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.
இதில் கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பிறகு இதுவரை சம்பளம் வழங்கவில்லை.
இதுகுறித்து வடக்கலுார் ஊராட்சியை சேர்ந்த தொழிலாளர்கள் கூறுகையில், 'கடைசியாக கடந்த நவ., 8ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது ஒரு வார சம்பளம் நிலுவை வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, 11 வாரங்கள் ஆகிவிட்டது. தற்போது, 12 வார சம்பளம் வழங்கப்படவில்லை. பொங்கல் கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்து விட்டோம்.
ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகத்திலும் புகார் தெரிவித்தும், எந்த பயனும் இல்லை. இதனால் பலர் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். அரசு உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். 100 நாட்கள் என்பதை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்,' என்றனர்.