/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போர்வெல் போட்டு ஒரு வருஷமாச்சு.. மின்சாரம் வாங்காமல் காலம் கடத்தியாச்சு; இரும்பறை மக்கள் புகார்
/
போர்வெல் போட்டு ஒரு வருஷமாச்சு.. மின்சாரம் வாங்காமல் காலம் கடத்தியாச்சு; இரும்பறை மக்கள் புகார்
போர்வெல் போட்டு ஒரு வருஷமாச்சு.. மின்சாரம் வாங்காமல் காலம் கடத்தியாச்சு; இரும்பறை மக்கள் புகார்
போர்வெல் போட்டு ஒரு வருஷமாச்சு.. மின்சாரம் வாங்காமல் காலம் கடத்தியாச்சு; இரும்பறை மக்கள் புகார்
ADDED : மே 05, 2025 10:55 PM

மேட்டுப்பாளையம்; இரும்பறை ஊராட்சியில், இரண்டு இடங்களில் போர்வெல் போட்டு, ஓராண்டாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஊராட்சி நிர்வாக தனி அலுவலர் போர்வெல்லுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கிழக்குப் பகுதியில் இரும்பறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் சிட்டேபாளையத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே போன்று இரும்பறை அருகே உள்ள இட்டிடேபாளையத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. போதிய குடிநீர் கிடைக்காததால், போர்வெல் அமைத்து, உப்பு தண்ணீர் தினமும் வினியோகம் செய்யும்படி, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து, ஊராட்சி நிர்வாகம், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தில், 4.26 லட்சம் ரூபாய் செலவில், சிட்டேபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே, ஓர் போர்வெல் போடப்பட்டது. அதே போன்று இட்டிடேபாளையம் அருகே, புளியம்பட்டி சாலையில், 4.80 லட்சம் ரூபாய் செலவில் புதிய போர்வெல் ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டு போர்வெல்களும், ஒரு ஆண்டுக்கு முன் போடப்பட்டது.
இரண்டு போர்வெல்களில் மின் மோட்டார் அமைத்து ஆறு மாதங்களுக்கு மேலாகின்றன. ஆனால் மின் இணைப்பு இன்னும் பெறவில்லை. தண்ணீர் வினியோகம் செய்யவில்லை.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ''போர்வெல்கள் அமைத்து ஓர் ஆண்டு ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், தனி அலுவலர் வந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்ட கலெக்டர், போர்வெல்லை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.