/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைந்து மூன்று மாதமாகுது; சரிசெய்யாததால் குடிநீர் வீணாகுது
/
குழாய் உடைந்து மூன்று மாதமாகுது; சரிசெய்யாததால் குடிநீர் வீணாகுது
குழாய் உடைந்து மூன்று மாதமாகுது; சரிசெய்யாததால் குடிநீர் வீணாகுது
குழாய் உடைந்து மூன்று மாதமாகுது; சரிசெய்யாததால் குடிநீர் வீணாகுது
ADDED : ஜன 28, 2024 08:46 PM

ரேஷன் கடை அருகே கழிவு நீர்
பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் ரேஷன் கடை அருகே உள்ள குடிநீர் குழாய் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் அந்த இடத்தில் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், இங்கு குப்பையும் உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த தண்ணீர் கசிவை கட்டுப்படுத்தி, இந்த இடத்தை துாய்மை படுத்த வேண்டும்.
- - சுப்பிரமணியம், சின்னாம்பாளையம்.
வீணாகும் அரசு சுவர்
உடுமலை - பழநி ரோட்டில், காந்திநகர் அருகே அரசு அலுவலக சுவரில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், அந்த வழியாக செல்வோர் அதைப்பார்த்து குழப்பமடைகின்றனர். சுவரில் போஸ்டர் ஒட்டுவோர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
கழிவு நீர் தொல்லை
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ராமபட்டினம் பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில், கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த கால்வாயில் உள்ள கழிவை சுகாதார பணியாளர்கள் வாயிலாக சுத்தம் செய்ய வேண்டும்.
- - கதிரேசன், பொள்ளாச்சி.
ரோட்டில் குப்பை
வால்பாறை நகரில், பல்வேறு இடங்களில் குப்பை திறந்த வெளியில் வீசப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இதை நகராட்சி அதிகாரிகள் கவனித்து குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - தாரணி, வால்பாறை.
பராமரிக்க வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், நகராட்சி ஸ்துாபி உள்ளது. இதன் வளாகம் பராமரிப்பின்றி, செடிகள், புதர் வளர்ந்துள்ளன. இது நகரின் அழகை பாதிக்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் நினைவு சின்னமான நகராட்சி ஸ்துாபியை பராமரித்து புதுப்பிக்க வேண்டும்.
- சரவணன், உடுமலை.
புதர்கள் அகற்றப்படுமா
கிணத்துக்கடவு - கோதவாடி செல்லும் வழியில் ரோட்டோரத்தில் செடிகள் முளைத்து புதர் போல் வளர்ந்து ரோட்டில் படர்ந்துள்ளது. இதனால் பைக் ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த வழியில் உள்ள புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -கோகுல், கிணத்துக்கடவு.
நகராட்சி கவனத்துக்கு
உடுமலை நகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் வீதியில், செடிகள் வளர்ந்துள்ளது. ரோடும் சேதமடைந்துள்ளது. ரோட்டில் குப்பையும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சியினர் இதனை சரிசெய்ய வேண்டும்.
- கணேசன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, பசுபதி வீதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், பாதசாரிகள் அப்பகுதியில் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். வாகனங்கள் விதிமுறை மீறி ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேல்முருகன், உடுமலை.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, பி.வி.லே., - அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்வோரை துரத்தி அச்சுறுத்துவதால் பலரும் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர், சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
- விக்னேஷ், உடுமலை.
மண்குவியல் அகற்றணும்
உடுமலை, ராஜேந்திரா ரோட்டில் மண் குவியல் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது புழுதிமண் பறப்பது அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மண் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேந்திரன், உடுமலை.
எரியாத தெருவிளக்குகள்
உடுமலை, கல்யாணி லே-அவுட் பகுதியில் தெருவிளக்குகள் மாலை நேரங்களில் சரியாக எரியாமல் உள்ளது. இரவில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் அவ்வழியாக சென்றுவருவதற்கு அச்சப்படுகின்றனர்.
- திலகவதி, உடுமலை.
வீணாகும் குடிநீர்
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, வஞ்சியாபுரம் பிரிவு அருகே கடந்த மூன்று மாதங்களாக, குடிநீர் குழாய் உடைந்து, அதிக அளவு குடிநீர் விணாகிறது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாகமோ அல்லது குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளோ இதை கவனித்து இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - மஜீத், சூளேஸ்வரன்பட்டி.